தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதில் இலவச பேருந்து, மகளிர் உரிமை தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது ஆண்களுக்கு சமமாக பெண்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வரும் நிலையில் அவர்களுக்கு பயன்படும் வகையில் உத்யோகினி திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசால் பெண்கள் முன்னேற்றத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இது. சுயதொழில் துவங்குவதற்காகவும், விவசாய நடவடிக்கைகளுக்கு பெண்கள் இத்திட்டத்தின் வாயிலாக கடன் வாங்க முடியும்.
இத்திட்டத்தின் மூலம் 3 லட்சம் வரை கடன் பெற முடியும். கைம்பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு இந்த வரம்பு எதுவும் கிடையாது. சிறு தொழில் ஆரம்பிக்க விரும்பும் பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. தொழில் மற்றும் தகுதியை பொறுத்து கடன் அதிகரிக்கப்படும்.18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 10 சதவீதம் முதல் 12% வரை வட்டியுடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் இத்திட்டத்தை தவறாது பயன்படுத்தி பயனடையவும்.




