
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பலரும் பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களை மையப்படுத்தி பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா என்ற திட்டம். இந்த திட்டம் தற்போது நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இதன் மூலம் கருவுற்ற தாய்மார்களுக்கு 6000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நல்ல உணவுகளை உட்கொள்ளும் நோக்கத்தில் மருத்துவ செலவுகளை சமாளிப்பதற்காக இந்த தொகை அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் 19 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு கருவுற்ற மூன்று மாதத்திற்குள் https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம். இதில் தகுதி உள்ள பெண்களுக்கு உதவி தொகை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தின் பலன்களை பெற வேண்டும் என்றால் உங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், உங்களிடம் பிபிஎல் ரேஷன் கார்டு அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா கார்டு இருந்தால், இந்தத் திட்டத்தின் தகுதியான பலன்களைப் பெறலாம். Pmmvy.nic.in என்ற இணைய தளத்திலோ அல்லது வீட்டிலிருந்த உங்கள் அங்கன்வாடி மையத்திலோ இந்தத் திட்டத்தில் பதிவு செய்து பலன்களைப் பெறலாம்.