
இந்தியாவில் மதுபானம் அருந்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. பாலின வேறுபாடு இன்றி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த மதுபானத்திற்கு அடிமையாகி வருகின்றனர். ஆண்கள் முதல் பெண்கள் வரை மதுபானம் அருந்துவது இப்போது சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் தேசிய குடும்ப நல ஆணையத்தின் சர்வே முடிவுகளின் படி, 1 விழுக்காடு பெண்களும், 22 விழுக்காடு ஆண்களும் மதுபானம் அருந்துகின்றனர். மதுபானம் அருந்துவதால் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமான ஆபத்து ஏற்படுகிறது. பெண்கள் மதுபானம் அருந்துவதால் அந்த மதுவில் இருக்கும் ஆல்கஹால் செரிக்க நீண்ட நேரம் ஆகிறது. மேலும், ஆண்களை விட பெண்களுக்கு தான் உடலில் பக்க விளைவு அதிகமாக ஏற்படுகிறது.
காதல் தோல்வி, டென்ஷன் குறைய நிம்மதியாக உறங்க என ஆண்கள் எதற்காக எல்லாம் மதுபானம் அருந்துகிறார்களோ, அதற்காகவே இப்பொழுது பெண்களும் மதுபானம் அருந்த தொடங்கி விட்டார்கள். குறிப்பாக விவாகரத்து ஆன பெண்கள் பாலின பிரச்சினைகளுக்கு, உள்ளாக்கப்பட்ட பெண்கள், மேலும் குடும்ப பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் என இந்நிலையில் உள்ள பெண்கள் தான் அதிகமாக மதுபானம் அருந்துகிறார்கள். இந்நிலையில், பெண்கள் மதுபானம் அருந்துவதால் பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களுக்கு குடல் புண் வயிற்றுப்புண் மார்பக புற்றுநோய் வருவதற்கு இந்த மதுபானம் அதிக அளவு காரணமாகும். ஆண்கள், பெண்கள் இரு பாலரும் மதுபானம் அருந்தும் பொழுது இன்பமாக இருந்தாலும் பின்பு அது கொஞ்சம் கொஞ்சமாக நமது வாழ்நாட்களை குறைக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.