பெண்களே.. கவனம் அலட்சியமாக இருக்காதீங்க.!! மருத்துவமனையில் இருந்து பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ.!!

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா செட்டி. அவர் தமிழில் “மிஸ்டர் ரோமியோ” என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவரது தங்கை ஷமிதா செட்டி. அவரும் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளார். அவருக்கு கர்ப்பப்பையை சுற்றி வளர்ந்துள்ள எண்டோமெட்ரியஸ் திசு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது .இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

அதில் அவர் “பெண்களே கவனமாக இருங்கள் தயவுசெய்து எண்டோமெட்ரியஸ்  என்பது என்ன..? அது எப்படி ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை கூகுள் செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எனக்கெல்லாம் எங்கே இருக்கப் போகிறது என கவனக்குறைவாக அலட்சியமாக இருக்காதீங்க. அடிக்கடி உடல்நிலை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 40% பெண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் இது குறித்து இன்றும் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். கவனமாக இருந்தால் மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி அறுவை சிகிச்சை செய்து சரிப்படுத்திக்கொள்ளலாம்”, என கூறியுள்ளார்.

https://www.instagram.com/reel/C677qg8N0vR/?utm_source=ig_embed&ig_rid=b2444cf7-e455-4368-8e38-e5f714c19d5b

Read Previous

ப்பா.. அழகில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி..!! ரசிகர்களை கவர்ந்த போட்டோஷூட்..!!

Read Next

அடுத்த விவாகரத்து.. ஜி.வி பிரகாஷை தொடர்ந்து இந்த பிரபல நட்சத்திர ஜோடி பிரிய போகிறதா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular