
கூந்தல் உதிர்வு, பொடுகு மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளால் பெண்கள் அதிகமான சிரமப்படுகின்றனர்.
இதனை பல முறையில் கட்டுப்படுத்த முடியும். அப்படி கட்டுப்படுத்த ஒரு மூலிகை என்னை போதும். அதனை செய்வது எப்படி என்று காண்போம்.
தேவையானவை:
- நல்லெண்ணெய்- 1/2 லிட்டர்
- மிளகு- 100 கிராம்
- மருதாணி இலை- கைபிடி அளவு
- வெந்தயம்- ஊற வைத்தது
செய்முறை:
- தயிர் மற்றும் மிளகை ஒன்றாக கலந்து மோர் போன்று தயார் செய்து கொள்ளவும்.
- அடுத்தநாள் காலையில் இதை ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
- மிளகின் அளவில் மருதாணியை எடுத்து கழுவிய பின் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். மேலும் ஒரு நாள் ஊற வைத்த வெந்தயத்தை எடுத்து அரைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு கனமான இரும்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் சூடானதும், அரைத்து வைத்திருக்கும் 3 விழுதையும் எண்ணெயில் போடவும்.
- கலவையில் இருக்கும் சலசலப்பு முற்றிலும் நின்று விடும் வரை அடுப்பிலேயே மிதமான தீயில் வைத்து கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்கவும்.
- எண்ணெய் சூடு ஆறியதும் ஒரு வடிகட்டியை எடுத்து, வடிக்கட்டியப்பின் ஒரு கண்ணாடி ஜாரில் அடைத்து வைக்கவும். வாரத்திற்கு 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் குறைந்தது இரண்டு மணி நேரம் தலையில் எண்ணெயை ஊற விட வேண்டும்.