நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே குறிப்பாக செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு நாளும் அர்ப்பணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்து மதத்தில் ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு கடவுளை சிறப்பாக வழிபடுவார்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை என்பது செல்வத்தின் தெய்வமாக விளங்கும் லட்சுமி தேவிக்கு இந்த வெள்ளிக்கிழமை நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. குறிப்பாக பெரியோர்கள் வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும் என்று வீட்டில் உள்ள அனைத்து முன்னோர்களும் பெரியோர்களும் கூறுவார்கள். ஏனென்றால் அப்பொழுதுதான் லக்ஷ்மி தேவியின் கடாட்சம் கிடைத்து செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில், வீட்டில் செல்வம் செழிக்க வெள்ளிக்கிழமை மாலை உங்கள் வீட்டின் கதவு இருபுறமும் மஞ்சள் குங்குமம் ஸ்வஸ்திகா குங்குமம் மற்றும் மஞ்சள் கலந்த ஸ்வஸ்திகா சின்னத்தை வைக்க வேண்டும். இந்த ஸ்வஸ்திகா வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை விலக்கி நேர்மறை ஆற்றலை உருவாக்க மிகவும் உதவுகிறது. இதை செய்வதன் மூலம் வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் விலகி செல்வம் செழிக்கும்.




