பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்த 24 வயது இளைஞர்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
காளீஸ்வரன் (24) என்பவர் சிவகங்கை கொட்டகுடியை சேர்ந்தவர். இவர் ஒரு ஓவிய கலைஞர். இவரது தாய் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த நிலையில் பணியில் இருந்த போதே இறந்துவிட்டார். அதானால் கருணை அடிப்படையில் அந்த வேலை தனக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பலத்காரம் செய்துள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சிவகங்கை மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் காளீஸ்வரனை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் காளீஸ்வரன் இரண்டு பெண்களை இதே வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சமபவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




