பெண்களை கர்ப்பமாக்கினால் 20 லட்சம் சம்பளம்..!! இளைஞர்களை குறி வைக்கும் மர்ம கும்பல்..!!

பெண்களை கர்ப்பமாக்கினால் 20 லட்சம் சம்பளம்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இணையதளம் மூலமாக மக்களை நூதன முறையில் மோசடிகள் செய்து வருகின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்புகள் வாங்கி தருவதாக கூறியும், அரசு உதவித்தொகை பெறவும், இந்த லிங்கை கிளிக் செய்து பரிசுகளை பெற்று கொள்ளலாம் போன்ற பல வழிகளில் மக்களை ஏமாற்றி பண மோசடி செய்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற பண மோசடிகளை தவிர்க்க காவல்துறை இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இருந்தாலும் ஆசை வாசை காட்டி பணம் பறிக்கும் கும்பலில் சிக்கி இன்னமும் பலர் தங்களது பணத்தை இழந்து வண்ணம்தான் உள்ளனர்.

அந்த வகையில், தற்போது சில கும்பல் பேஸ்புக் மூலமாக ஏமாற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக வேலை இல்லாமல் இருக்கும் ஆண்களை குறிவைத்து, குழந்தை பேறு இல்லாத பெண்களை 3 மாதங்களுக்குள் கர்ப்பமாக்கும் ஆண்களுக்கு 20 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என்று கூறி, பேஸ்புக்கில் இளம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவி வருகிறது. இதையும் சிலர் நம்பி, அந்த நம்பருக்கு கால் செய்து மாட்டிக் கொள்கிறார்கள்.

அவர்கள் பேசும் பொழுது, போட்டோவில் இருக்கும் பெண்களை தாங்களே சந்தித்து பாலியல் உறவு கொண்டு கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் கிடைக்கும் என்றும், அப்படி கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்றாலும் கூட ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள். மேலும் இதற்கு சம்மதித்தால் அவருடைய அடையாள அட்டையை அனுப்பி, அவர்களுக்கு ரூ.999 கட்டணம் செலுத்த வேண்டும் என தொடங்கி ரூ.1 லட்சம் வரை பணத்தை கறக்கிறார்கள். அவர்களால் முடிந்த வரை பணத்தை கரைத்து, அப்புறம் போன் நம்பரை மாற்றி விடுகிறார்கள். எனவே மக்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.

Read Previous

மகளிர் உரிமைத் தொகை 2024..!! இனி ரேஷன் கார்டு இருந்ததால் தான் 1000 ரூபாய்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Read Next

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை..!! சம்பளம் 41,800/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular