நல்ல பக்குவமான பெண்களுக்கு தெரியும் வாழ்க்கையின் அர்த்தமும் அதன் தேவையும்.
அப்படிப்பட்ட பெண்கள் ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது…
சாப்பிட்டியா, தூங்கினியா, என்ன பண்றீங்க, எப்படி இருக்கீங்க என்று தன்னைப் பற்றி சிந்திக்கும் ஒருவன் வேண்டும்னு நினைப்பாங்க அப்படி ஒரு ஆண் கிடைத்தால் கண்டிப்பாக அந்த பெண் அவனை பொக்கிஷம் போல பார்த்துப்பாள்.
பெண்கள் அதிகமா காதல் வெச்சிட்டா அவங்களுக்கு posisive அதிகமா இருக்கும்.
தன்னுடையவன் மற்ற பெண்களிடம் சிரிச்சி பேசுறது கூட கோபத்தை உண்டு பண்ணும் அதை புரிந்து ஆண்கள் நடந்தால் நல்லாயிருக்கும்.
சோகமாக இருக்கும் பொழுது தோள் கொடுக்கும் ஒரு தோழனாய், கண்ணீரை துடைத்து விடும் ஒரு காதலனாய் அரவணைப்பு தருவதில் ஒரு தாயாக இருக்கும் ஆண்மகன் வேண்டும்.
பெண் எல்லாரையும் நினைத்து அழ மாட்டாள், எல்லாரையும் பார்த்து சிரிக்கவும் மாட்டாள் இதையெல்லாம் உங்களுக்காக பண்ணுனா நீங்க எவ்வளவு special என்று தெரிஞ்சி கொள்ளுங்க அதை விட்டுட்டு ஏன் எப்பவும் அழுமூஞ்சா இருக்கன்னு கேட்காதீங்க.
நீங்க எங்க இருக்கீங்க, எப்படி இருக்கீங்ஙன்னு அடிக்கடி call பண்ணிக் கேட்பதற்க்கு காரணம் நீங்க பத்திரமா இருக்கீங்களானு பார்க்க தான் அது தெரியாமல் ஏன் அடிக்கடி call பண்ணி நச்சரிக்கிரன்னு திட்டாதீங்க.
24 மணி நேரமும் வேலையிலேயே பிஸியாக இருக்கும் ஆண்களே உங்கள் கடைக் கண் பார்வைக்காக ஏங்கும் பெண்ணை பார்க்க கூடாதா..
தன்னை பெருமையாக பார்க்கும், தனக்கு சரிசமமான உரிமை தரும், தன் சுயமரியாதையை மதிப்பளிக்கும் ஒரு ஆணே ஒரு பெண்ணின் எதிர்ப்பார்ப்பு.
மொத்தத்தில் ஒரு பெண் ஆணிடம் எதிர் பார்ப்பது கொட்டிக் கொடுக்கும் அன்பு, குட்டி கொடுக்காமல் சொல்லும் அறிவுரை, தன்னை குழந்தையை போல பாவிக்கும் மனப்பக்குவம், கோவப்படும் போது கொஞ்சி சமாதானப்படுத்துவது.
இது போல சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சி வைச்சிக்காம பொண்ணுங்களை புரிஞ்சிக்க முடியலைன்னு dialog பேசாதீங்க.




