பெண்கள் இருக்கும் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய கல்யாண முருங்கை மரம்..!! பெண்களின் சகல நோய்களை பணப்படுத்தும் அற்புத மரம்..!!

பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாணம் முருங்கை கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். பெண்களுக்கு என்று வரமாக கிடைத்த மரம் என்றும் கல்யாணம் முருங்கையை  கூறலாம், பெண்களின் ஹார்மோன் சிறப்புகளை சரியாக வேலை செய்ய வைத்து சீராக்க உதவுகிறது.

மேலும் இந்த இலை மாதந்தோறும் சமைத்து பெண்கள் உண்டு வந்தால் பெண்களுக்கு இருக்கக்கூடிய மாதவிடாய் கருபப்பை பிரச்சனை என எதுவும் பெண்களை அண்டாது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த கல்யாணம் முருங்கை. இதனுடைய பயன்கள் குறித்து பதிவில் காணலாம்.

 1. கல்யாணம் முருங்கை பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனையில் இருந்து சரி செய்யும். கரு சிதைவிலிருந்து சிசுவை காப்பாற்றும். பெண் மலட்டு தன்மையை நீக்கும்.
 2. பெண்கள் கல்யாணம் முருங்கையை சாப்பிட்டு வரும்பொழுது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி குறையும்.
 3. கல்யாணம் முருங்க இலை சாற்றை பெண்கள் தினமும் குடித்து வரும் பொழுது குழந்தை இல்லாத பெண்களின் குறை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 4. மேலும் இந்த இலை சாற்றை குடித்தால் பெண்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் நீர் தாரை எரிச்சல் சரியாகும். உடல் பருமன் குறையும்.
 5. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க பெரிதும் உதவுகிறது.
 6. இந்த கல்யாண முருங்கை சிறுநீரக பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.
 7. மேலும் பித்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
 8. பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களின் ஆண்மை அதிகரிக்கும் கல்யாணம் முருங்கை இலையுடன் உளுந்து, கசகசா, மாதுளை பழச்சாறு அனைத்தையும் அரைத்து சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு உடலில் ஆர்வம் ஏற்படும்.
 9. கல்யாண முருங்கை காய்ச்சலை குணப்படுத்தி உடலை வலுவாக்கும். இரத்தசோகை உள்ளவர்கள் கல்யாணம் முருங்கை இலை, மிளகு, பூண்டு, முருங்கைக்கீரை இவற்றை சூப் செய்து குடித்தால் ரத்தம் ஊறும்.
 10. வெறும் கல்யாணம் முருங்க இலையுடன் மிளகு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மழைக்காலங்களில் வரும் சளி, காய்ச்சல் குணமடையும்.
 11. கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து உடலில் சேர்த்து பூசி குளித்து வர தோல் பிரச்சனை, சொரி, சிரங்கு போன்றவை குணமடையும்.
 12. வெள்ளைப்படுதல் குணமாக கல்யாண முருங்கை இலையுடன் சேர்ந்து ஊறவைத்த வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல், வெட்டை நோய் போன்றவை குணமடையும்.
 13. இந்த இலையை வதக்கி வாதம் உள்ள இடத்தில் கட்டினால் வாதம் குறையும். இப்படி ஏகப்பட்ட நன்மைகள் கொண்ட இந்த இலையை கண்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Read Previous

கண்பார்வை பிரச்சனையா? இதை 21 நாட்கள் குடியுங்கள் கண்ணாடி அணிய தேவை இல்லை..!!

Read Next

பாரத போருக்கு பின் கிருஷ்ண பரமாத்மா எப்படி இறந்தார்..? முன் ஜென்ம வினை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular