பெண்கள் கர்ப்பமாக உள்ளார் என்பதற்கான 10 அறிகுறிகள் இதோ..!!

பெண்களுக்கு தாய்மை பாக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பெண்களுக்கும் கர்ப்பம் தரிப்பதற்கான அறிகுறிகள் மாறுபடும். மாதவிடாய் தள்ளிப் போவது மட்டுமே கர்ப்பம் தரிப்பதற்கான அறிகுறி கிடையாது. வேறு சில அறிகுறிகளை வைத்தும் நீங்கள் கர்ப்பம் அடையப்போகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கர்பம் தரிப்பதற்கான அறிகுறிகள்

  1. நீங்கள் கர்பமாக இருந்தால் உங்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படும். இந்த உடல் சோர்வு பிரச்சனை முதல் மூன்று மாதங்களுக்கு இருக்கும் .
  2. அடிக்கடி குமட்டல் ஏற்படுவது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகவும். இந்த குமட்டல் பிரச்சனை ஒரு சிலருக்கு  முதல் மூன்று மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு இருக்கும் ஒரு சிலருக்கு குழந்தை பிறக்கும் வரையும் கூட இருக்கலாம்.
  3. கர்மமாக இருக்கும் பொழுது அதிகப்படியான பசி எடுக்கும். ஆனால் சாப்பிட்ட பின்னர் அஜீரணக் கோளாறு மந்த உணர்வும் ஏற்படும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.
  4. பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு வழக்கத்திற்கு மாறாக உடல் சூடு அதிக அளவில் இருக்கும். அந்த நேரத்தில் மிகுந்த சோர்வாக இருப்பார்கள். அதிக நேரம் தூங்குவார்கள். சுறுசுறுப்பாக இருக்க மாட்டீர்கள்.
  5. நீங்கள் கருவுற்றிருந்தால் உணவு சமைக்கும் பொழுது வரும் வாசனையை விரும்ப மாட்டீர்கள். அந்த வாசனை உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். அதற்கு மாறாக மண்வாசனை, சாம்பல் வாசனை இது போன்ற வாசனைகளை நீங்கள் விரும்புவீர்கள்.
  6. வீட்டு மாடிப்படி ஏறும்போதும், நடக்கும்போதும் மூச்சுத் திணறல் ஏற்படும். கருவில் வளரும் குழந்தை தாயின் நுரையீரல் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பதால் தான் இது போன்ற மூச்சு திணறல் பிரச்சினை கருவுற்ற பெண்களுக்கு ஏற்படுகிறது.
  7. கருவுற்ற பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.
  8. கருவுற்று இருக்கும் பெண்களுக்கு அதிகப்படியான முதுகு வலியும் ஏற்படும். இந்த முதுகு வலி கர்ப்ப காலம் முழுவதுமே இருக்கும்.
  9. சில பெண்கள் கருவுற்றிருந்தால் மிக குறைவான இரத்தப்போக்கு ஏற்படும் இதனை மாதவிடாய் என்று கருதாமல் மருத்துவரை அணுகுவது மிக நன்று.
  10. கருவுற்ற பெண்களுக்கு கை, கால் வீக்கம் ஏற்படும். சிறிது தூரம் நடந்தால் கூட கால் வலி அதிக அளவில் இருக்கும்.

Read Previous

உங்கள் தொண்டை கரகரப்பாக உள்ளதா..? இதை ட்ரை பண்ணி பாருங்க..!! தொண்டை கரகரப்புக்கு பாய் சொல்லுங்க..!!

Read Next

அல்சர் நோயால் அவதிப்படுகிறீர்களா..? அல்சரை குணப்படுத்தும் வீட்டு முறை வைத்தியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular