Oplus_131072
எழுந்தவுடன், முகம் அளம்பி விட்டு அல்லது குளித்து விட்டு வந்து வாசலில் சாணம் கலந்த நீரை தெளித்து கோலம் போட வேண்டும்.
அதே போல் மாலை நேரத்திலும் செய்ய வேண்டும்.
அப்படி கோலம் போடும் போது கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லிகொண்டே போடுவது சிறப்பு.
*கங்கை நீரே*…
*கோதாவரியே*…
*கொளப்படி சாணமே*…
*அள்ளி தெளிக்கின்றேன்*…
*ஐஸ்வர்யம் பெருக* *வேண்டும்*…
*கரைத்து தெளிக்கின்றேன்*….
*கைலாசம் சேர வேண்டும்*…
*இருளோடு போ மூதேவி*…
*பொருளோடு வா*
* ஸ்ரீ தேவியே*…
என்று கூறியவாறு வாசல் தெளித்து கோலம் இட வேண்டும்.
இதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும் மற்றும் செல்வம் பெருகும்.




