
பெரம்பலூர்: பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மோகன்ராஜ் (29) என்ற இளைஞர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோகன்ராஜ் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம்பிடித்துள்ளார். இந்நிலையில், மோகன்ராஜை பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், அவரை சரமாரியாக அடித்து அரும்பாவூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, இக்குற்றத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பிருப்பதாக கூறி, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.