
அன்றாட வாழ்வில் சமைக்கும் பெண்களுக்கு தான் தெரியும் சமையல் என்பது எவ்வளவு பெரிய கலை மற்றும் விஷயம் என்பது. மேலும் சமையலில் சில ரகசியங்களும் உள்ளது. ஒரு சில வெற்றை எல்லாம் இவ்வாறு செய்தால் சமையல் சூப்பரா இருக்கும் என்று நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து கூறுவார்கள். அந்த வகையில் சில சமையல் ரகசியங்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தக்காளி மற்றும் எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதம் செய்கையில் சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளறி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாக இருக்கும். உப்பு மஞ்சள் எலுமிச்சை சாறு வெல்லம் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்தால் பாகற்காய் கசக்காது. வடை எண்ணெய் உரியாமல் இருக்க எந்த உருளைக்கிழங்கு மாசிகளை சிறிதளவு சேர்க்கவும். பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊற வைத்தால் பூரி புஷ் புஸ் என்று சுவையாக இருக்கும். தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்தால் தோசை மொறு மொறுப்பாகவும், சுவை அதிகமாகவும் இருக்கும். பெண்களே இந்த குறிப்புகளை எல்லாம் தெரிந்து கொண்டு சமையல் செய்து அசத்துங்கள்.