நம் நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணிவேராக திகழ்பவர்கள் பெண்கள்தான். குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆரோக்கியமாகவும் அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை அறிந்து ஒவ்வொரு நாளும் முகம் சுளிக்காமல் செய்பவர்கள் பெண்கள். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் ஓடி உதவி செய்து அனைவரையும் தன் உணவையும் பாசத்தையும் கொடுத்து சரி செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு உடம்பு சரியில்லை என்று பெண்கள் ஓய்வெடுப்பது என்பது மிகவும் குறைவு. மேலும், தனக்கென்று தன்னை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் குடும்பத்துக்காக மட்டும் யோசிக்கும் பெண்கள் பலர் இருக்கின்றனர். இந்த செய்தி பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வாகும். மேலும், பெண்கள் அணியும் ப்ரா பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை. இதனால் பெண்களின் உள்ளத்தை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இதைப் பற்றி நடத்திய ஒவ்வொரு ஆராய்ச்சியும் வெவ்வேறு முடிவுகளை தான் தந்துள்ளது.
ப்ரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படும். ப்ரா அணியாமல் இருப்பதால் பல சிக்கல்கள் உள்ளது என்றும் பல ஆராய்ச்சிகள் வேறு வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றது. இந்நிலையில், பெண்கள் பிரா அணியாமல் உறங்குவது நல்லது என பலவித ஆராய்ச்சிகள் ஆலோசனைகள் வந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் இந்த ஆய்வின் முடிவுகள் எதுவும் பெண்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் வகையில் இல்லை என்பதை குறிப்பிடத்தக்கது. இது பெண்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையிலேயே தான் இருக்கிறது. இதற்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தான் 15 ஆண்டுகள் ஜூன் டெனிஸ் ரௌலியன் என்பவர் ஆய்வு செய்து அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளார். ஆனால் இதை ஏற்பதா இல்லையா என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.




