• September 29, 2023

பெண்கள் முன்னேற்றத்திற்கான புதிய திட்டம் – ரூ. 3 லட்சம் வரை கடன் வசதி.. வட்டி கிடையாது!..

தமிழகத்தில் பெண்கள் மேம்பாட்டு கழகம் சார்பாக பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலும் வட்டியில்லாமல் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

கடன் உதவி:

தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை தேடி வரும் நபர்களுக்கு மத்தியில் சுய தொழில் செய்து வருமானம் ஈட்டும் ஆர்வத்துடன் ஏராளமான பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பெண்கள் மேம்பாட்டு கழகம் சார்பாக கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரையில் வட்டியில்லா கடன் தொகை வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்பும் பெண்களின் குடும்ப வருமானம் 1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அத்துடன் வயது வரம்பு 25 முதல் 55 உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இதில் கேட்ரிங், பியூட்டி பார்லர், காபி தூள், தயாரிப்பு கண்ணாடி உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் கிடைக்கும். அத்துடன் தொழில் தொடங்குவதற்கு 30 சதவீதம் மானிய தொகையும் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் உத்யோகினி திட்டம், அன்னபூர்ணா திட்டம், முத்ரா யோஜனா திட்டம், தேனா சக்தி திட்டம், யூகோ மகிளா பிரகதி தாரா திட்டம், ஸ்த்ரீ ஆகிய திட்டங்கள் வாயிலாக பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவி வருகிறது.

Read Previous

தமிழகத்தில் ஆகஸ்ட் 26 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – வெளியான அறிவிப்பு!..

Read Next

OLA, Uber செயலிகளுக்கு இணையாக களமிறங்கும் தமிழக அரசு செயலி – முதல்வர் அறிவிப்பு!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular