டெல்லியில் உள்ள பெண்கள் விடுதியின் வடிகாலில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் குவிந்து கிடப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ஆணுறைகள் மிதப்பது போன்றும், இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் விசாரணையில் இந்த வீடியோ ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டது என்றும், மற்றொன்று நைஜீரியா நாட்டில் இருந்து வெளியானது என்றும் தெரியவந்துள்ளது. திட்டமிட்டு இதுபோன்ற போலி வீடியோ பரப்பப்பட்டு வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.




