பெண்கள் வீட்டை நோட்டமிட்ட இளைஞர்; சந்தேகத்தில் அடித்து நொறுக்கியதில் மயங்கி பலி..!! சென்னையில் அதிர்ச்சி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் பெண்கள் அங்குள்ள விடுதிகள் மற்றும் வீடுகளில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஒரகடம் பகுதியில் பெண்கள் தங்கியுள்ள அறையை நோட்டமிட்ட வாரு இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியை எட்டிப் பார்த்துள்ளார். இதனை கண்ட மக்கள் இளைஞனை திருடன் என எண்ணி சரமாரியாய் அடித்து நொறுக்கினார். இந்த சம்பவத்தில் மயங்கி விழுந்த இளைஞரை மீட்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்பொழுது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த நபர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

உயிரிழந்த நபர் குறித்த விசாரணை செய்கையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த பரசுராமன் (வயது 28) என்பது தெரிய வந்தது. இவரை தாக்கியதாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read Previous

ஹெல்ப்புக்கு யாருமே வரல..!! தகாத முறையில் உரசியவருக்கு குத்துவிட்ட சீரியல் நடிகை.!!

Read Next

தலைகுப்பற கவிழ்ந்த டிராக்டர்..!! கணவர், பச்சிளம் குழந்தை முன் தாய் துள்ளத்துடிக்க பலி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular