
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள இளையாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 57). சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் இருந்து, பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து இளையாங்கன்னி செல்ல வேறு ஒரு பஸ்சில் ஏறினார்.
அப்போது கையில் வைத்திருந்த பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. மர்ம மனிதர்கள் அபேஸ் செய்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.