பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இருவர்..!! போலீசார் விசாரணை..!!
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (39). இவர் நேற்று (ஆகஸ்ட் 1) இரவு வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் முன் இருந்த இரண்டு மர்ம நபர்கள் ஈஸ்வரியை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவம் எதற்காக நடந்தது என விசாரித்து வருகின்றனர்.