பெண் உதவியுடன் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! கட்டிப்போட்டு தப்பியோடிய காமுகன்கள்.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பாக 15 வயதுடைய சிறுமி மாயமானார். சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை தேடி வந்தனர், இந்நிலையில் டிராக்டர் தள்ளுவண்டிக்கு அடியில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது, இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த சிறுமையை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடதியதில் அந்த சிறுமி இரு நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது, இது பற்றி சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தள்ளனர். மேலும் அந்த புகாரியில் அவர்கள் அதே கிராமத்தை சார்ந்த ஒரு பெண் தொலைபேசியில் எங்கள் மகளை பேச வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில் காவல்துறையினர் “செல்போனில் சிறுமியிடம் மறுமுனையில் பேசிய அந்த நபரும் மற்றொரு நபரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர், இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அவரை கை, கால்களை கட்டி டிராக்டர் வண்டிக்கு அடியில் வைத்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியை செல்போனில் பேச வைத்த பெண் மற்றும் அந்த குற்றவாளிகள் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவர்களை தேடி வருகிறோம்.” என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்,பாதிக்கப்பட்ட அந்த 15 வயதுடைய சிறுமி தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Previous

திருமண விருந்தில் விஷம்.? 100+ உறவினர்களுக்கு வாந்தி, பேதி..!! அதிர்ச்சி சம்பவம்.!!

Read Next

பூர்வகுடிகளின் வீடுகளை சூறையாடி மீட்கப்படும் வனத்துறை நிலங்கள்..!! தர்மபுரியில் பரபரப்பு சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular