
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் புறநோயாளிகள் பாதுகாப்பு அலுவலராக பெண் ஒருவர் செயல்பட்டு வருகிறார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்த போது அங்கு டாக்டர் ஒருவர் வந்துள்ளார். அப்பெண் இருந்த அறையை பூட்டிவிட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. பெண் அலுவலர் எதிர்ப்பு தெரிவித்ததால், டாக்டர் அவரை தாக்கியதோடு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அலுவலர், மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் நேசமணி நகர் போலீசார், டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.