
பெண் என்பவள் போதை அல்ல…
நாம் கண்டோ, உண்டோ, களிப்புற..
பெண் என்பவள் ஆடை அல்ல,
நாம் உடுத்தி, கிழித்து, சேதப்படுத்த…
பெண் என்பவள் கண்ணாடி அல்ல..
நம்மையே நாம் அங்கு காண…
பெண் என்பவள் கொடி கம்பம் அல்ல
நம்மை கொடியாய் உயர்த்த…
பெண் என்பவள் கனவு அல்ல…
நம் ஆசைகளை மட்டும் காண…
பெண் என்பவள் வர்ணம் அல்ல…
நம் கொண்டாடங்களுக்கு பூசி மகிழ..
பெண்
ஒரு மருந்து , நாம் அன்பிற்கு ஏங்குகையில்….
பெண்
ஒரு ஊசி , நம் கிழிசல்களை தைத்து அழகாக்கும்….
பெண்
ஒரு கூரிய கத்தி , நம் தவறுகளுக்கு நம்மை கிழிப்பாள்…
பெண்
ஒரு கொடி, உயரே பறந்து நம்மை பார்க்க வைப்பாள்…
பெண்
ஒரு காட்சி, நம் காட்சி பிழைகளின்
விடையாகி திருத்துவாள்…
பெண்
ஒரு தூரிகை, நம் வெற்று வாழ்க்கையில், வர்ணம் பூசி,
பின் வர்ணமாகி, நம் கறை பட்டு , கரைந்தே போகிறாள்…..
படித்ததில் பிடித்தது