மகள்கள் அப்பாக்களின் உலகம் அப்பாக்களின் அரவணைப்பும் வழிகாட்டுதலும் மகள்களின் வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியமானது..
உங்கள் மகளின் முதல் ஹீரோ நீங்கள்தான் அவருடைய ரகசியங்களையும் கவலைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக இருங்கள். உங்கள் மகளின் திறமைகளையும் கனவுகளையும் நம்புங்கள் அவளுக்கு ஊக்கம் ஆதரவு அளியுங்கள். எப்படி மதிக்க வேண்டும்? அதாவது பிறரை எப்படி மதிக்க வேண்டும் என்பதை உங்கள் மகளுக்கு உங்கள் நடத்தையின் மூலம் கற்றுக் கொடுங்கள். உங்கள் மகள்களுக்கு பாதுகாப்பான அதே நேரத்தில் சுதந்திரமான சூழலை உருவாக்குங்கள். தவறுகள் செய்வது இயல்பு என்பதை உங்கள் மகளுக்கு உணர்த்துங்கள் அவளுடைய தவறுகளை அன்புடன் அணுகுங்கள். உங்கள் மகளின் உடல் மற்றும் மனநலத்தில் அக்கறை கொள்ளுங்கள் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவியுங்கள். கல்விதான் ஒரு பெண்ணின் சிறந்து ஆயுதம் என்பதை உங்கள் மகளுக்கு உணர்த்துங்கள். உங்கள் மகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துங்கள் தற்காப்பு முறைகளை கற்றுக்கொடுங்கள். உங்கள் மகளுக்காக நேரம் ஒதுக்குவது மிக முக்கியம். அவளுடன் பேசுங்கள் விளையாடுங்கள் அவளுடைய உலகத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருங்கள். உங்கள் மகளை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை அடிக்கடி வெளிப்படுத்துங்கள். உங்கள் மகளின் வாழ்க்கையில் ஒரு சிறந்த அப்பாவாக இருந்து அவளுடைய எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றுங்கள். இந்த வெப் ஸ்டோரி பெண் குழந்தைகளை பெற்று அப்பாக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்…!!