
நான் 1990 இல் படிக்கும்போது ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது தான் பெண்கள் பூப்படைவார்கள்.. ஆனால் இன்று அப்படி இல்லை இன்று உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி #பூப்படைத்து விடுகிறார்கள்.. ஒரு பத்து வயது குழந்தைக்கு என்ன தெரியுமா??
பள்ளிக்கூடம் போகும் வயதில் அம்மா வயிறு வலிக்குது என்று வீட்டில் சுருண்டு படுத்து கொள்கிறாள் பாவம் தானே?
பத்து வயதில் ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் வீட்டில் ஓரமாக உட்கார்ந்து வைத்து விடுகிறார்கள்… பாவம் அந்த குழந்தைகளின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது…
உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் ,14 வயசுக்கு மேல் அந்தப் பெண் பூப்படைந்து விட்டாள் அவர்களுக்கு நீங்கள் பூப்புனிதா நீராட்டு விழாவை நீங்கள் விமர்சியாக வையுங்கள்… வேண்டாம் என்று சொல்லவில்லை…
BEL நிறுவனத்தில் Deputy Engineer காலிப்பணியிடங்கள்..!! ஊதியம்: ரூ.1,40,000/-..!! உடனே விரையுங்கள்..!!
பத்து வயதுக்கு உள்ளே உள்ள பெண் குழந்தைகள் பூப்படைந்து விட்டாள் அவர்களை எப்போதும் போலே குளிப்பாட்டி விடுங்கள்…
அதை விட்டுப் போட்டு ஊரே பேச வேண்டும் என்று நினைத்து பெரிய பெரிய பேனர் வைத்து தாய்மாமன் மேளதாரத்துடன் சீர்வரிசை கொண்டு வர வேண்டும் என்று நினைக்காதீறார்கள்…
பாவம் தாய் மாமன் அவன் கஷ்டப்பட்டாலும் என் பிள்ளைக்கு நீ தான் தாய்மாமன் நீ தான் சீர் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி சீர் செய்ய வைக்கிறார்கள். தாய் மாமனும் கடனை உடனே வாங்கி தன் தங்கச்சி மகளுக்கு சீர் செய்கிறார்…..
அந்தக் காலத்துல பூப்புனியா நீராட்டுல எதற்காக வைத்தார்கள் தெரியுமா?? என் வீட்டிலேயும் கல்யாணம் வயதில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது என்று தெரிவதற்காக தான் பூப்புனித நீராட்டு விழா சிம்பிளாக நடத்தினார்கள்….
எனக்கும் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கிறது என் மகள் வயசுக்கு வந்தாலும் எளிய முறையில் தான் இருக்கும்… எப்போதும் போல குளிப்பாட்டி விட்டு என் மகளை #பள்ளிக்கு செல்ல அனுமதிப்பேன்..
என்னுடைய மகளின் சுதந்திரத்தை நான் பறிக்க மாட்டேன்..