பெயிண்டு அடித்த போது தவறி விழுந்த வடமாநில வாலிபர் சாவு..!!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த திலகர்நகர் பகுதி யில் அசோக் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 25) என்பவர் சம்பவத்தன்று பெயிண்டு அடித்துக் கொண்டிருந் தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

தினமும் 2 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?..

Read Next

படித்ததில் மிகவும் வலித்தது..!! என்னை கண் கலங்க வைத்த காட்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular