தேங்காய் பர்ஃபி எப்படி பண்றதுன்னு இந்த பதிவில் நாம பார்க்கலாம். பெரியவங்கள இருந்து சிறிய வாங்கவரைக்கும் ஸ்வீட் நான் யாருக்கு தாங்க பிடிக்காது இந்த நிலையில வீட்ல இருக்கா தேங்காய் வச்சு அருமையான தேங்காய் பர்பி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையானவை:
தேங்காய் – ஒன்று, சர்க்கரை – 250 கிராம், நெய் – 100 மில்லி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.
செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். சர்க்கரையை கம்பிப் பதமாக பாகு காய்ச்சி… தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறவும். இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.
குறிப்பு: பாதாம், முந்திரியை அரைத்து சேர்க்கலாம். சிறிது ரவை சேர்த்தும் தயாரிக்கலாம்.
இந்த மாதிரி நீங்களும் உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சில நேரங்கள்ல வீட்ல அதிகமா தேங்காய் வாங்கிடுவோம் அந்த சமயத்துல கூட தேங்காய வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி ஸ்வீட் பண்ணி வீட்ல இருக்குறவங்கள அசத்துங்க.




