நான் அன்றாட வாழ்க்கையில் சில விருது நாட்களிலும் சில விசேஷ நாட்களிலும் ஸ்வீட் என்பது செய்வார்கள். அதில் முதலிடத்தை பிடிப்பது தான் பாயாசம். இந்த பாயாசத்தில் நிறைய விதமான வகைகள் உள்ளது பால் பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், சேமியா பாயசம், பாசிப்பருப்பு பாயாசம், அன்னாசி பல பாயாசம் என்று பல வகைகள் உண்டு. ஆனால் அன்னாசி பல பாயாசம் மிகவும் ருசியாக இருக்கும் அன்னாசி பழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த பாயசத்தை செய்து கொடுத்தால் அதன் சத்தம் கிடைக்கும் பாயாசமும் தீர்ந்துவிடும் அந்த அளவிற்கு சுவை மிகுந்தாக இருக்கும். இந்த அன்னாசிப்பல பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
அன்னாசி பழத்தில் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
அன்னாசிப்பழ துண்டுகள் – ரெண்டு கப்
காய்ச்சிய பால்- ஒரு லிட்டர்
கண்டன்ஸ்டு மில்க்-ரெண்டு கப்
ஜவ்வரிசி – 1/2 கப்
பைனாப்பிள் எசென்ஸ் – 2 ஸ்பூன்
நெய் முந்திரி திராட்சை – தேவையான அளவு
செய்முறை:
அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊற வைத்து மற்றொரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும் போது ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி ஜவ்வரிசியை குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை சேர்த்து அது கொதிக்க ஆரம்பித்ததும் பாதி அளவு அன்னாசி பழத்தை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் எடுத்து வைத்திருந்த ஜவ்வரிசியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து கண் டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் சிறிதளவு பைனாப்பிள் எசன்ஸ் பைனாப்பிள் துண்டுகள் மற்றும் நெய்யல் வருத்தம் முந்திரி திராட்சை ஆகியவற்றை சேர்த்து இரண்டு கலக்கு கலக்கி அடுப்பை ஆஃப் செய்தால் நமக்கு சுவையான ஆரோக்கியமான அன்னாசி பழ பாயாசம் தயார். இதை நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் செய்து கொடுங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும்.




