
- பெரிய நெல்லி மரம் பொதுப்பண்புகள்
* மரத்தின் பெயர் : பெரிய நெல்லி மரம்
* தாவரவியல் பெயர் : பில்லாந்தஸ் எம்பிலிகா
* ஆங்கில பெயர் : Gooseberry tree, Amla tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : ஈரமான வளமுள்ள மணல்சாரி மண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : யுபோர்பியேசி
* மற்ற பெயர்கள் : அரிநெல்லி, காட்டு நெல்லி
பொதுப்பண்புகள் :
* பெரு நெல்லி உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ அல்லது மஞ்சளாகவோ காணப்படும்.
* இதில் பனாரசி, என்ஏ 7, கிருஷ்ணா, கஞ்சன், சக்கயா மற்றும் பிஎஸ்ஆர் போன்ற ரகங்கள் உள்ளன.
* இம்மரத்தினை வளர்ப்பதன் மூலம் மண் சரிவு, மண் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்த்து மண்ணின் தன்மை கெடாமல் நிலைப்படுத்த உதவுகிறது.
* இந்த நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும்.