இன்றைய காலங்களில் சமையலுக்கு பெரிதும் பயன்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தது பெரிய வெங்காயம், அப்படி இருக்கும் பட்சத்தில் வெங்காயத்தின் நன்மைகள்..
சமையலுக்கு முக்கிய சுவை தருவது வெங்காயம் தானே அப்படிப்பட்ட வெங்காயத்தை பொன் நிறத்தில் வதக்குவதனால் சுவை கூடுகிறது, குறிப்பாக பிரியாணியில் வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து சேர்ப்பதனால் சுவையும் மனமும் கூடுதலாகும்,
சுவை தருவது மட்டுமல்லாமல் உடலுக்கு நன்மைகளையும் தருகிறது செரிமான பிரச்சனைகளை சரி செய்து குடலில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது, உடலில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை, அரிப்பு மற்றும் ஜலதோஷம் பிரச்சனைகளுக்கு வெங்காயம் ஒரு சிறந்த அதிமருந்தாகும், வெங்காயத்தில் தெரியும் கருப்பு அச்சுகளை நீக்கி அவற்றை பயன்படுத்தலாம், இந்த வெங்காயத்தில் ஒரு வகையான நச்சுத்தன்மையை வெளிவிடுகின்றன அந்த நஞ்சு தன்மை தான் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது, மேலும் வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது உடலுக்கு ஆபத்தை தரக்கூடியது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!