
இன்றைய சூழலில் பலரும் தங்களது அவசர நேரங்களுக்கு பெரிய வெங்காயங்களே பயன்படுத்தி வருகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் பெரிய வெங்காயத்தில் கருமை நிறம் படிந்து இருந்தால் பயன்படுத்தக் கூடாது.
பலரும் சமையலுக்கு பெரிய வெங்காயத்தை பயன்படுத்தி வருவது வழக்கம் அப்படி இருக்கையில் பெரிய வெங்காயத்தை சுற்றி கருப்பு நிறத்தில் படிந்திருந்தால் அதனை ஆஸ்பெரிகலஸ் நைகர் என்று அழைக்கப்படும் பூஞ்சை ஆகும், இது ஒரு வகை நச்சுத்தன்மையை வெளியிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது, அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த கருப்பு நிறம் பதிந்த வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதனால் உடலுக்கு ஆபத்தை தருவதாக கூறப்படுகிறது, மேலும் இந்த வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால் தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, என ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய நோய்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் மேலும் கருப்பு நிறம் படிந்த வெங்காயத்தின் தோலினை நீக்கிய பின்பு அதனை பயன்படுத்தலாம்..!!