பெருமாள் கோயிலுக்கு போன 70 பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்..!!
துறையூர் அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையான இன்று(செப்.28) ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதில் பாதயாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் இரண்டாவது மண்டபம் அருகே சென்றபோது அங்கிருந்த தேன்கூடு திடீரென கலைந்தது. அந்தத் தேனீக்கள் கடித்ததில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.




