பெரும் அதிர்ச்சி சம்பவம்..!! ரூ.1 லட்சத்திற்கு குழந்தையை விற்ற தாய்..!!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்த ஆதி கணேஷ் – நந்தினிக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி 2வது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. வறுமை காரணமாக பெண் குழந்தையை இடைத்தரகர் தேவிகா மூலம் கவுண்டம்பாளையம் மாந்தோப்பைச் சேர்ந்த மகேஸ்வரன் – அனிதா தம்பதிக்கு ரூ.1 லட்சத்திற்கு குழந்தையை விற்றுள்ளனர். இதையடுத்து, குழந்தையின் தாய் நந்தினி, இடைத்தரகர் தேவிகா, குழந்தையை வாங்கிய அனிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.