மைசூரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் வன்முறை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த 19 வயது இளம்பெண் சென்னைக்கு வேலை தேடி வந்தார். இவர் வேலை தேடி வந்த நிலையில் எங்கே தங்கி வேலை தேடுவது என்று தெரியாது இன்றைய நிலையில் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தோளில் ஷகிலா அறையில் தங்கி வேலை தேடி வந்தார். இவ்வாறு வேலை தேடி வந்த அந்த பெண்ணிடம் சதீஷ் என்பவர் பேச்சு கொடுத்த பின்னர் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று அரும்பாக்கத்தில் உள்ள தனது தோழி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள சதீஷ் விசாரணையில் உண்மை அம்பலமான நிலையில் கைது செய்யப்பட்டு இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு வேலை தேடி வந்த இந்த இளம் பெண்ணுக்கு இப்படி ஒரு சோகம் நடந்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.