
பெங்களூருவில் இருந்து மணி (30), சுரேஷ் (30), பிந்து (25) உள்பட 10 பேர் நேற்று கன்னியாகுமரி வந்தனர். இன்று கோவளம் கடற்கறையில் சுற்றிப்பார்த்துவிட்டு, மணி, சுரேஷ், பிந்து ஆகியோர் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் 3 பேரும் சிக்கினர். இதனைப் பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். மீனவர்கள் மற்றும் சிலர் 3 பேரையும் மீட்க முயன்றனர். அவர்களால் பிந்துவை மட்டுமே மீட்டனர். போலீசார் விரைந்து வந்து மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணி, சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.