பெரும் சோகம்.. காப்பாற்றுங்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் பறிபோன 3 உயிர்கள்..!! ஈரோடு அருகே பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சின்ன குட்டை புதூர் பகுதியில் வசித்து வருபவர்கள் நாகராஜ்- சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு தர்ஷினி, கீர்த்தனா என்கின்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று சங்கீதா தனது இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு செண்பகப் புதூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். தற்போது இந்த வாய்க்காலில் பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து 2000 கன அடி நீர் திறக்கப்பட்ட இருப்பதால் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிள்ளது. அப்போது சங்கீதா வாய்க்காலில் ஓரம் நின்று துணி துவைத்து கொண்டிருந்தபோது திடீரென்று வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த அவரின் மகள் தர்ஷினி நீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா மகளை காப்பாற்றுவதற்காக சென்றபோது அவரும் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதை தொடர்ந்து தாய் மற்றும் சகோதரி நீரில் அடுத்த செல்வதை பார்த்த கீர்த்தனா அவர்களை காப்பாற்றுவதற்காக சென்றபோது அவரும் நீரில் அடித்து செல்லப்பட்டார். அவர்களது சத்தம் கேட்டு காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் இறங்கி மூவரையும் தொடங்கினார், இந்நிலையில் நள்ளிரவு 12:30 மணி அளவில் கோவை கடத்தூர் அடுத்த மில்மேடு பகுதியில் உள்ள வாய்க்காலில் தர்ஷினி ,கீர்த்தனா அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. ஆனால் அவரது தாய் சங்கீதா என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேரில் மூழ்கி அடுத்தடுத்து  உயிர்கள் பறிபோன சம்பவம் பகுதியில் பெயரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

பகீர்.‌.கள்ளகாதலிக்கு 10 லட்சம் வரை செலவு செய்த காதலன்.. திரும்ப பணம் கேட்டு தராததால் தீ வைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவம்.!!

Read Next

#Breaking: தொடர்ந்து ஐந்தாவது நாள்: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular