தஞ்சாவூர் மாவட்டத்தில், பூண்டி மாதா கோவில் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து வந்த பிராங்க்ளின் (23), ஆண்டோ (20) மற்றும் அவரது நண்பர்கள் கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) ஆகிய 5 பேரும் கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆற்றின் வேகம் அதிகரித்து 5 பெரும் நீரில் இழுத்துச்செல்லப்பட்டனர். இதனையடுத்து கலையரசன், கிஷோர் ஆகியோர் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மனோகரன் மற்றும் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் தேடப்பட்டு வருகிறது.




