பெரும் சோகம்..!! டிவி விழுந்து காயமடைந்த குழந்தை பரிதமாக மரணம்..!!

பெரும் சோகம்..!! டிவி விழுந்து காயமடைந்த குழந்தை பரிதமாக மரணம்..!!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் டவுன் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரின் மகன் தர்ஷனுக்கு இரண்டரை வயதாகிறது. கடந்த 11ம் தேதி தர்ஷன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டில் டேபிள் மீது இருந்த தொலைக்காட்சிப் பெட்டி (டி.வி) குழந்தை தர்ஷன் மீது விழுந்துள்ளது.

இதில், படுகாயமடைந்த தர்ஷனுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12 மணியளவில் குழந்தை இறந்துவிட்டது.

தகவலறிந்த திண்டிவனம் போலிசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை டி.வி விழுந்து அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

தமிழக அரசில் வேலை..!! சம்பளம்: ரூ.35,000/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

வீட்டுக்காரர் கோச்சுக்கிட்டா.. மனைவிமார்கள் எப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம் தெரியுமா..? இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular