பெரும் சோகம்..!! நேருக்கு நேர் மோதிய பைக்குகள்..!! 2 பேர் பலி..!!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பாலூத்து கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், பிரதீப் (16) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் வேல்முருகன் உடன் பைக்கில் அமர்ந்து வந்த மாலியன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மூன்று பேருமே ஹெல்மெட் அணியாத நிலையில், வேல்முருகன் கவனக்குறைவாக வந்ததே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.




