பெரும் சோகம்..!! வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்த பெண்..!!
உடுமலை, பள்ளபாளையம் ஊராட்சி திருமுருகன் நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செந்தில்குமார்(50). இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் வெளியூர் சென்ற நிலையில், மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனிடையே நேற்றிரவு செந்தில்குமார் வீடு திரும்பியபோது மாரியம்மாள் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவலின்பேரில் வந்த தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




