பெரும் சோகம்..!! 6 பேரை காவு வாங்கி லோடு லாரி..!! போலீஸ் விசாரணை.!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஸ்டோன் காம் அருகே நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஏழு பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சாலையின் எதிர்புறத்தில் சோயா பீனை ஏற்றிக்கொண்டு லோடு லாரி ஒன்று வந்தது.

திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்ட இழந்த லாரி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த காரின் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில்  காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாய் பலியானர். இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் விபத்தில் காயமடைந்த மற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தானர்.

ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர்களில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மற்ற மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்தனர்.தீவிர  சிகிச்சை பிரிவில் இருக்கும் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

அடக்கொடுமையே! காதலிக்காக மதம் மாறிய காதலன்..!! தலைமறைவான காதலி கர்ப்பமான செய்தி கேட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு.!!

Read Next

அடக்கொடுமையே..! மனைவி மற்றும் மகளை அரிவாளால் வெட்டிய நபர்..ரயில் முன் பாய்ந்து தற்கொலை.!!. அதிர்ச்சி சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular