
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் செல்போன் பழுதானதால், கேம் விளையாட முடியாத விரக்தியில் செல்போனை ரூ.1000-க்கு விற்றுள்ளார். பின்னர், வீட்டைவிட்டு வெளியேறி 30 கி.மீ., தூரம் வரை நடந்து சென்று, அங்கிருந்து பெங்களூரு சென்றுள்ளார். தொடர்ந்து, அங்கிருந்து ரயில் மூலம் உத்தரப் பிரதேசம் சென்று, சாமியாரின் ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார். சிறுவன் சென்ற இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, போலீசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.