பெற்றோரின் சொல் செயலில் தான் பிள்ளைகள் வளர்ப்பு பொருட்படுகிறது எனவே பெற்றோர்கள் படிக்க வேண்டிய பதிவு..!!

இல்லற வாழ்வியலில் உள்ள பிரச்சனைகளை பற்றி விடமுயற்ச்சி படம் பேசுகிறது. என்று விமர்சனங்களை பார்க்க முடிகிறது. அஜித் போன்ற பெரிய நடிகர் இந்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுத்ததற்க்கு முதல் வாழ்த்து.கதை பற்றி முழுதாக தெரியவில்லை ஒன்லைன் மட்டுமே. தெரிந்தது..நமக்கு இப்போது விடாமுயற்ச்சி படம் பற்றிய விமர்சனம் எழுதவில்லை என்பதால் நமக்கு அந்த கதை பற்றி முழுதாக தெரிய வேண்டும் என்பது இல்லை. ஆனாலும் கட்டாயம் பார்க்கனும் என்று மட்டும் தோன்றுகிறது பார்த்து விடுவேன்…

நேற்று மருத்துவமனையில் 60 வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் மருத்துவரை சந்திக்க காத்திருக்கும் போது எனது பக்கத்தில் அமர்ந்து இருந்தார். அனைவரும் மருத்துவமனையில் அமர்ந்து இருக்கும் போது மற்றொறு வயதான பெண்மணியை அவர் கணவர் கைபிடித்து அழைத்து சென்றார். இதை பார்த்த அந்த பெண்மணி பாருங்க அவர் எப்படி மனைவியை கவனித்து கொள்கிறார் என்று எங்க வீட்டுக்காரர் என்னை தனியா அனுப்பிவிட்டார் பிரஷர் வேறு என்றார்.

எல்லோருக்கும் இந்த மாதிரி அமையறது இல்லை என்று வருத்தப்பட்டார். அவர் கணவர் SI என்றும். நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கனும். அதுவும் சூடா இருக்கனும் என்றும் ஆறிப்போய் இருந்தால் திட்டுவார். அவர்கள் குடும்பத்தில் அக்கா,தங்கை அவர்கள் பிள்ளைகள் என்றால் ஓட வேண்டியது. மனைவி என்றால் கவனிப்பு இல்லை.

அவருக்கே உடம்பு சரியில்லை ரெஸ்ட் எடுக்க கூறினர் அவர்கள் அக்கா மகன் கூப்பிட்டவுடன் அவருக்காக சென்றார் இங்கு எனக்கு வரவில்லை என்று கூறினார். அடுத்ததாக அவர் கூறியது தான் இங்கு பெரும்பாலான பெண்களின் மனதில் உள்ளவை. சிரிச்சி கூட பேச மாட்டார் என்றார். இங்கு நிறைய பெண்களின் வாழ்வியலே வீட்டிற்கு வரும் கணவர் என்னிடம் பேசுவது கூட கிடையாது என்பது தான்…

60 வயது பெண்மணிக்கு. தன் மனைவியை அரவணைத்து அழைத்து செல்லும் கணவர்களை பார்த்து ரசிக்கும் படி மனது உள்ளது. பெண்களின் அதிக படி எதிர்பார்ப்பு தன் வீட்டில் உள்ள ஆண்கள் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்பது மட்டுமே அவர்களது எண்ணமாக உள்ளது. இதை அவர்கள் செய்தாலே போதும். அனைத்து குடும்பமும் மகிழ்ச்சியாக வாழலாம்..

குடும்பத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் கலந்து பேசி முடிவெடுப்பது. இவற்றை நீங்கள் செய்தாலே இவற்றை பார்த்து வளரும் உங்கள் பிள்ளைகளின் வாழ்வும் அதை போலவே பெண்களை மதித்து குடும்பத்தினரை மதித்து வாழ்வர். எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று இல்லாமல் உறவை மதிக்கும் பண்பும் வளரும்..

வீட்டில் எப்போதும் மனைவியின் அருகில் அமர்ந்து பேசுங்கள். அவை உங்களுக்குள் விரிசல் இல்லாமல் நமக்கு எதுனாலும் பார்த்துக்க ஆள் இருக்கு என்ற நம்பிக்கையும் நமக்கும் பார்த்துக்க ஒரு பொறுப்பு இருக்கு என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு தோன்றும். எந்த வயது ஆனாலும் உணவை ஊட்டி பரிமாறிக் கொள்ளுங்கள். இவை மனதை எப்போதும் இளமையாக மகிழ்ச்சியாக வைத்து இருக்க உதவும்..

சிறு வயதில் இருந்தே இவற்றை குழந்தைகளுடனே நாம் கொண்டு செல்லும் போது குழந்தைகள் பெற்றோரின் அன்பை பார்த்து வளரும் போது அவர்களுக்கும் அவை அன்பாக பார்க்கப்பட்டு அவை நாளை அவர்கள் வாழ்வியலில் அடுத்த கட்ட அன்பாக வடிவம் பெரும். பிள்ளைகள் எதிரில் அன்பாக இருக்க தயங்கும் நாம் பிள்ளைகள் எதிரில் சண்டையிட தவறுவது இல்லை. அதற்கு தயக்கமே காட்டுவது இல்லை..

இப்படி தினமும் போர்களமாகவே வாழும் தம்பதியர் பிள்ளைகள் வாழ்வும் போர்களமாகவே உள்ளது.அதிக நெருக்கடிகளை தரும் கணவன், மனைவிகள். ஒரு கட்டத்தில் வெறுப்படையும் ஆணோ ,பெண்ணோ தான் தவறான ஆண்கள், பெண்களின் வலையங்களில் சிக்கி வாழ்வியலை சிக்கலாக்கி நம் குடும்ப வாழ்வியலே சிதையும் நிலைக்கு ஆளாகின்றனர்.

இப்படியான பெற்றோர்களின் வளர்ப்பில் வளர்ந்த பிள்ளைகள் வாழ்வியலில் தன் துணையை நம்புவது இல்லை. இல்லற வாழ்வியலில் இருவரும் மற்றவர் உணர்வுக்கு மதிப்பளித்து வாழ்ந்தால் போதும். கடைசியில் அந்த பெண்மணி கூறியது.

அந்த மனுஷன் ரொம்ப நல்லவர்ம்மா. நல்லா இருக்கனும். பார்த்துக்கனும் என்றார் நீ எவ்வளவு செய்தாலும் நான் அன்பை அளிப்பேன் என்பவர்களுக்கு நம்மால் என்ன செய்து விட முடியும். இருக்கும் போது தெரியாத அன்பு இல்லாத போது எவ்வளவு யோசித்தாலும் எதற்கும் பயன்படாது…!!

Read Previous

சில குடும்பங்களில் நல்ல பிள்ளைகள் தான் அதிக வலியையும் வேதனையும் பெற்று குடும்பத்திற்காக தன்னையே இழக்கிறார்கள்..!!

Read Next

வயது வித்தியாசத்தில் நடைபெறும் திருமணங்கள் பல நேரங்களில் வாழ்க்கையை சீரழித்து விடுகிறது…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular