பெற்றோர்களின் கவனத்திற்கு..
உங்களுடைய மகனுக்கோ இல்லை என்றால் மகளுக்கோ திருமணத்தில் விருப்பம் இருந்தால் மட்டுமே திருமணம் முடித்து வையுங்கள் கட்டாயப்படுத்தி உங்களுடைய சுயநலத்துக்காகவும் கௌரவத்துக்காகவும் திருமணம் முடித்து வைக்காதீர்கள் அப்படி முடித்து வைத்து விட்டீர்கள் என்றால் பின் விளைவு உங்களுக்கு அல்ல உங்களுடைய பிள்ளைகளுக்குத் தான் ….
தன்னுடைய தாய் தந்தை சொல்லிவிட்டார்கள் என்று விருப்பமில்லாமல் திருமணம் முடித்து விட்டால் அந்தக் கணவனும் மனைவியும் சந்தோசமாக வாழ மாட்டார்கள்…
ஊருக்கு வேண்டுமென்றால் அவர்கள் கணவன் மனைவியாக வாழலாம் ஆனால் அவர்கள் வீட்டுக்குள் எப்போதுமே எலியும் பூனைமா தான் இருப்பார்கள்…
குடியிருக்கும் வீட்டை நம பார்த்து பார்த்து கட்டுகிறோம்..
குடும்பம் என்பது ஒரு கோயில் மாதிரி அந்த கோயிலை நாம் எப்படி கட்ட வேண்டும் என்று தாய் தந்தைக்கு சொல்லி புரிய வேண்டிய அவசியம் இல்லை…..
தாய் தந்தை காலம் கொஞ்ச காலம் தான் அதற்குப் பிறகு உங்களுடைய பிள்ளைகள் தான் வாழ்க்கையை வாழ போகிறார்கள் அந்த வாழ்க்கையை நீங்கள் கெடுத்து விடாதீர்கள்….
பிடித்தவர்களுடன் சந்தோஷமாக வாழட்டும்




