
பெற்றோர்களின் கவனத்திற்கு தன் பிள்ளைகளை வளர்க்கும் போது பிள்ளைகளிடம் சொல்லக்கூடாதவை என்று ஒரு சில விஷயங்கள் உள்ளது அது என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
தன் குழந்தைகளிடம் படிக்கலைனா நீ உருப்படாமல் போய் விடுவ. படிக்கலைன்னா நீ பிச்சை தான் எடுக்கணும். பணம் மட்டும் இல்லைனா உன்ன ஒரு நாய் கூட மதிக்காது. நீ எச்சில் இலை எடுக்க தட்டு கழுவதால் லாய்க்கப்படுவே நினைக்கிறேன் படிக்க நீ சுத்தமா லாயக்கு இல்ல. வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரு தான் அடக்கணும்னு சொல்லுவாங்க உன்னை அடக்க யாரு இருக்காங்களோ தெரியல. பணம் என்ன மரத்திலயா காய்க்குது அது வேணும் இது வேணும்னு கேட்டுட்டு இருக்க. உன்னோட திமிருக்கு நீ கண்டிப்பா அழிஞ்சுதான் போகப் போற பாரு. இந்த மாதிரி வாக்கியங்களை ஒருபோதும் உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் சொல்லக்கூடாது.
பிள்ளைகளிடம் சொல்ல வேண்டிய வாக்கியங்கள் என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
தங்கம் நீ படிச்சினா வாழ்க்கையில நல்ல முன்னுக்கு வரலாம். உழைச்சா நிறைய சம்பாதிக்கலாம். பணம் சம்பாதித்தா மதிப்புடன் வாழ முடியும். படிச்சு முன்னுக்கு வந்து நாலு பேருக்கு வேலை தர அளவுக்கு நீ நல்ல வேலைக்கு போகணும். நீ இந்த பரீட்சைலயும் பாஸ் ஆயிடுவ எல்லா பரிச்சலையும் பாஸ் ஆயிடுவ எனக்கு உன் மேல அந்த நம்பிக்கை இருக்கு நீ கவலைப்படாத தங்கம். எல்லார்கிட்டயுமே ஒரே மாதிரி மரியாதையுடன் நடந்து கொள்ளணும். நம்ம போடுற உழைப்புதான் பணத்தின் மதிப்பை நமக்கு புரிய வைக்கும். உனக்கு நிறைய திறமை இருக்கு தங்கம் நீ சீக்கிரமா முன்னுக்கு வருவ. இந்த மாதிரி வாக்கியங்களை உங்கள் பிள்ளைகளிடம் கண்டிப்பா சொல்லுங்கள் அவர்களுக்கே ஒரு ஊக்கு சக்தியாக அவர்களின் வாழ்க்கையில் செயல்படும்.