• September 14, 2024

பெற்றோர்களே உஷார் : குழந்தைக்கு எமனாக மாறிய கேரட்..!! துடிதுடித்து இறங்க சோகம்..!!

இலங்கையில் உள்ள வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்றே கடந்த 11ஆம் தேதி மாலை நேரத்தில் கேரட் துண்டை விழுங்கி உள்ளது.

அப்போது அந்த துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்கி குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் வைத்து அந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது குழந்தைக்கு மருத்துவம் பார்க்க போதிய வசதி இல்லை எனக் கூறி அடுத்ததாக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பப்பட்டது. அங்கிருந்து குழந்தை புறப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரட் துண்டை விழுங்கியதால் ஒன்றரை வயது பிஞ்சு குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெற்றோரையும், உறவினரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read Previous

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு செல்கிறது..!! புகார் சொன்ன பெண்..!! நொடியில் அந்தரபல்டி..!!

Read Next

திடீரென பெய்த தீ மழை – உடலில் தீப்பிடித்து கருகிய மக்கள்..!! பதறவைக்கும் சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular