பெற்றோர்களே உஷார்..!! தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனையை அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக பொது சுகாதார துறை வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றிமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு பொது மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்று மே மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து பலர் உயிரிழந்தார்கள். குழந்தைகளும், சிறுவர்களும் அதிகம். குறிப்பாக சென்னையில் அதிகப்படியான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்ல திடீர் தடை..!! சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..!! காரணம் என்ன..?

Read Next

பேருந்தை முந்தி சென்ற பேருந்தின் முன் சக்கரம்..!! பதறிப்போன பேருந்து பயணிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular