பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பிட்ட தட்டை கழுவ கற்றுக் கொடுக்க வேண்டும்..!! ஏன் தெரியுமா..??

Oplus_131072

சாப்பிட்ட தட்டை கழுவ கற்றுக் கொடுங்கள்…. (உங்கள் பிள்ளைக்கு..)

இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார்.

“அப்பா இருக்கட்டும் நானே கழுவுறேன்” என்று சொல்லியும் கேட்பதில்லை.

“ஏன் அப்பா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா ” என்று கேட்டேன்.

“இல்ல… இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது”.

மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்காக எங்க அம்மா கழுவ வேண்டிருக்கு. நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 குழந்தை . அப்போ எங்க அம்மா எங்க ஆறு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 6 × 90 = 540 தட்டு கழுவனும்.

நம்ம சாப்பிட தட்டை நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை அம்மாவுக்கு குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்டை நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்…

சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்…. மனைவிதான் கழுவி வைப்பாள். அதில ஒரு பெருமை. இதுல என்ன இருக்கோ தெரியாது… ( பல வருடம் நானும் அப்படித்தான் இருந்தேன் – இதை சொல்லும்போது வெட்கமாக இருக்கு )

முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள். நேரம் கிடைக்கையில் உதவி செய்யுங்கள்.

பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்… (வீட்டைக் கட்டிப் பார்..கல்யாணம் முடித்து பார்) என்பது ஒரு பழமொழி.. இந்த பழமொழியோடு உன் வீட்டில் பாத்திரத்தை கழுவிப் பார். என்றும் சேர்த்து கொள்ளலாம்.

சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் அது ஒரு பெரிய சுமை..

ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்… பெண்களின் நிலை உங்களுக்கு நன்றாகவே புரியும்…

ஆம்… மனிதநேயம் மற்றும் சமத்துவம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது..

Read Previous

மார்கழி கோலத்தின் மகத்துவம்.. கோலத்தின் மீது பூக்களை வைப்பது ஏன் தெரியுமா..??

Read Next

குழந்தைகளைத் திட்டுங்கள்’ என்கிற தலைப்பில்.. மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular