பெற்றோர் கண்முன்னே 4 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..!!கதறி துடித்த பெற்றோர்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மொளசி அருகில் உள்ள முனியப்பன் பாளையத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரியும் வேலுச்சாமி. இவர் தனது மனைவி சசிகலாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா, அதன்யா ஸ்ரீ என்கின்ற இரண்டு மகள்களும், சபரீசன் என்கின்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் வேலுச்சாமி சம்பவ தினத்தன்று ஜேடர்பாளையம் ஜமீன் இளம் பள்ளி அருகில் உள்ள கள்ளுக்கடை மேடு பகுதிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் வேலை முடிந்ததும் கள்ளுக்கடை மேடு பேருந்து நிலையத்தில் தனது மனைவிக்காக காத்துக் கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து கள்ளுக்கடை மேடு பேருந்து நிலையத்தில் சசிகலா பேருந்தில் இருந்து தனது மூன்று குழந்தைகளுடன் கீழே இறங்கியுள்ளார்.

பின் எதிர் திசையில் நின்று கொண்டிருந்தார் தன் தந்தையை பார்த்த அதன்யா ஸ்ரீ வேகமாக அவரை நோக்கி ஓடி சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஜேடர்பாளையத்தில் இருந்து பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் நிரப்பும் வாகனம் குழந்தை அதன்யா ஸ்ரீ மீது மோதியது.

இதில்  குழந்தை அதன்யா ஸ்ரீ தூக்கி வீசப்பட்டார். மேலும் குழந்தை அதன்யா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிர் இழந்தார். இதனை பார்த்த குழந்தை அதன்யா ஸ்ரீ-யின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அழுது கதறி துடித்தனர். இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து வந்த ஜேடர்பாளையம் காவல் துறையினர் குழந்தை அதன்யா ஸ்ரீ உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வாகன ஓட்டுனரை தீவிரமாய் தேடி வருகின்றனர்.

Read Previous

அதிர்ச்சி.. அரசுக்கு சொந்தமான கல்குவாரி பள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலம்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

சிறப்பு முகாம்களில் 78,667 பேர் பயன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular