
தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் விஜய் பேசியது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய். தற்போது அரசியலில் குதித்து இருக்கின்றார். விஜய் மக்கள் இயக்கம் என்பதை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றி இருக்கின்றார். கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி இருந்தார்.
அதைத்தொடர்ந்து இந்த வருடமும் தமிழகத்தில் 234 மாவட்டங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக ஜூன் 28ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக இன்று சென்னையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் நடைபெற்று வருகின்றது.
இதில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த நடிகர் விஜய் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் மேடை ஏறிய விஜய் எதுவும் பேச மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீட் தேர்வு குறித்து பேசி இருந்தார். அவர் நிகழ்ச்சியில் கூறியதாவது: “நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழக அரசின் தீர்மானத்தை முழு மனதாக ஏற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நீர் விலக்கு கோரும் தீர்மானத்தை உடனே வரவேற்க வேண்டும்.
சிறப்பு பொதுப் பட்டியலை உருவாக்கி கல்வி மற்றும் பொருளாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும் என்று பல விஷயங்களை பேசி இருந்தார். மேலும் மாணவர்களிடம் ஜாலியாக படியுங்கள், ஸ்ட்ரெஸ் இல்லாமல் படியுங்கள், வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்” என்று கூறி பேசி இருக்கின்றார். நீட் தேர்வு குறித்து மத்திய அரசை நடிகர் விஜய் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகின்றது.